விவசாய உற்பத்திகளுக்கு நியாயமான விலை கிடைக்கவேண்டும்! லால்காந்த சுட்டிக்காட்டு
விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஆர்வம் காட்ட வேண்டுமாக இருந்தால் அவர்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என விவசாய அமைச்சர் கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் பா.தேவரதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
விவசாயிகளின் கோரிக்கை
“அனைவரும் ஒன்றிணைந்து புதிய நாளுமன்றம் புதிய ஜனாதிபதியை கொண்டு வந்துள்ளீர்கள். நாட்டில் ஆளுகின்றவர்கள் ஆளப்படுகின்றவர்கள் என இருந்தார்கள்.
தற்போது ஆளப்படுகின்றவர்களே இருக்கிறார்கள். அரசாங்கம் அமைப்பதற்கு முன்பு மூன்று அமைச்சர்கள் இருந்த போதே விவசாயிகளுக்கான உரமானியத்தை அதிகரித்தோம்.
விவசாயிகளினால் கோரிக்கை வந்தது நெல் தவிர்ந்த ஏனைய பயிர்களுக்கும் பசளை மானியம் வழங்குமாறு அதனையும் வழங்கினோம்.
நாட்டில் உணவு பாதுகாப்பை மேம்படுத்தி உணவு உற்பத்தியை அதிகரிப்பதே நோக்கம் நெல்லுக்கு உத்தரவாத விலை வழங்க வேண்டும் என விவசாயிகளிடம் கோரிக்கை இருந்தது.
அதன் அடிப்படையில் நெல்லுக்கு 120 ரூபா உத்தரவாத விலையை வழங்கினோம்.
அரசாங்க கோரிக்கை
120ற்கு கொள்வனவு செய்வதாக அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. அதனைப்பார்த்த தனியார் அதிகமாக கொள்வனவு செய்தனர்.
இந்த விலை காணாது என்று எங்கும் எதிர்ப்பு வரவில்லை. இன்று சோளம் தொடர்பான பிரச்சனை காணப்படுகின்றது.
140 - 165 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஆர்வம் காட்ட வேண்டுமாக இருந்தால் அவர்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்.
இதன் காரணமாக விவசாயத்துறைக்கு தேவையான அனைத்து அமைச்சுக்களையும் உள்ளடக்கியதாகவே இந்த அமைச்சு காணப்படுகின்றது” என்றார்.





மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

சக்திவாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்: வெளியான முக்கிய அறிவிப்பு News Lankasri
