மட்டக்களப்பில் சுகாதார அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்ட தொழிற்சாலை
மட்டக்களப்பில் உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி, மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் ஐஸ்கிறீம் கூம்புகளை தயாரித்த தொழிற்சாலையொன்றை சுகாதார அதிகாரிகள் நேற்று(29.04.2023) சுற்றிவளைத்துள்ளனர்.
இது தொடர்பாக சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையிலேயே இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணனின் பணிப்புரையின் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எம்.மாதவனின் வழிகாட்டலில் பொதுச்சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து கிழக்கு பல்கலை கழக மருத்துவ பீட மாணவர்களும் இச்சுற்றி வளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த தொழிற்சாலை உரிமையாளர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதுடன்
கைப்பற்றப்பட்ட பொருட்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 1 மணி நேரம் முன்

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
