மட்டக்களப்பில் 10, 000 பேர் வேலை செய்யக் கூடிய தொழிற்சாலை: இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

Batticaloa S. Viyalendiran Sri Lanka Politician Economy of Sri Lanka
By Rusath Jan 18, 2024 11:12 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்திலே 10, 000 பேர் வேலை செய்யக் கூடிய தொழிற்சாலையை உருவாக்கும் நோக்குடம் தற்போது வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எருவில் கிழக்கு பகுதியில் அமைக்கப்படவுள்ள வீதி அபிவிருத்திகளைப் பணிகளை வியாழக்கிழமை (18.01.2024) இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பார்வையிட்டுள்ளார்.

செப்பனிடப்படவுள்ள வீதிகளைப் பார்வையிட்ட பின்னர் இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் திடீரென அதிகரித்த தேங்காய் விலை

நாட்டில் திடீரென அதிகரித்த தேங்காய் விலை

பொருளாதாரம் மீளெழுச்சி

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது இறைவனுடைய அருளாலும், அரசாங்கம் முன்னெடுத்துள்ள காத்திரமான நடவடிக்கைகளாலும் பொருளாதாரம் படிப்படியாக மீளெழுச்சி கண்டு வருகின்றது.

மட்டக்களப்பில் 10, 000 பேர் வேலை செய்யக் கூடிய தொழிற்சாலை: இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் | Factory In Batticaloa Employees 10 000

மட்டக்களப்பில் 10, 000 பேர் வேலை செய்யக் கூடிய தொழிற்சாலை: இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் | Factory In Batticaloa Employees 10 000

இவ்வாறான இக்கட்டான சூழலில், நிதியைக் கொண்டு வந்து அபிவிருத்தி வேலைகளுக்குப் பயன்படுத்துவதென்பது சாதாரண விடையம் அல்ல.

ஆனாலும் பலர் விமர்சனங்களை முன்வைக்கலாம் ஆக்கபூர்வமான விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயார். ஆனால் விசமத்தனங்களை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. இதனால் யாருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை. எம்மைப் பொறுத்தளவில் எமக்கு வாக்களித்த மக்களுக்கும், எம்மை நம்பிய மக்களுக்கும், ஏதாவது நல்ல விடையம் செய்ய வேண்டும்.

என்ற நோக்குடன்தான் நாம் இரவு பகலாக வேலை செய்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்திலே 36000 விதவைத் தாய்மார்கள் உள்ளார்கள், 8000 மாற்றுத் திறனாளிகள் உள்ளர்கள், 25000 பேர் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளார்கள், 8000 பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளார்கள், இவ்வாறான நிலையில் இம்மாவட்டத்தில் எந்த தொழிற்சாலையையும் உருவாக்கவில்லை.

இலங்கையர்களுக்கு மத்திய வங்கி வெளியிட்ட எச்சரிக்கை

இலங்கையர்களுக்கு மத்திய வங்கி வெளியிட்ட எச்சரிக்கை

தொழிற்சாலையை உருவாக்குவதன் நோக்கு

நாம் மட்டக்களப்பு மாவட்டத்திலே 10, 000 பேர் வேலை செய்யக்கூடிய தொழிற்சாலையை உருவாக்கும் நோக்குடம் தற்போது வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமது குடும்பத்தினரோடு இம்மாவட்ட மக்கள் இம்மாவட்டத்திலே வாழவேண்டும். நாம் உரிமைக்காகவும், அபிவிருத்திக்காகவும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

மட்டக்களப்பில் 10, 000 பேர் வேலை செய்யக் கூடிய தொழிற்சாலை: இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் | Factory In Batticaloa Employees 10 000

மட்டக்களப்பில் 10, 000 பேர் வேலை செய்யக் கூடிய தொழிற்சாலை: இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் | Factory In Batticaloa Employees 10 000

எமக்கு இரண்டும் தேவை. நாம் புதினம் பார்ப்பதற்கு வரவில்லை. எனவே எமக்கு உரிமையும் தேவை, அபிவிருத்தியும் தேவை என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மக்களுக்கு கௌரவமான வாழ்க்கையை நாம் உருவாக்க வேண்டும். பிச்சைக்காரர்களின் புண் போல ஒரே பிரச்சனையை வைத்துக் கொண்டு கதைத்துக் கொண்டிருக்க முடியாது.

பிச்சைக்கான் பிச்சையக் காட்டி புண் எடுப்பான், மாறாக சிலர் தமிழர்களின் பிரச்சனையைக் காட்டி வாக்கெடுக்கின்றார்கள். இறுதியில் ஒன்றும் நடைபெறப்போவதில்லை. எம்மைப் பொறுத்தவரையில் எமது சமூகத்திற்கு எம்மால் முடிந்த சேவையைச் செய்யவேண்டும் என்பதுதான் எமது நோக்குமாகும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் 10, 000 பேர் வேலை செய்யக் கூடிய தொழிற்சாலை: இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் | Factory In Batticaloa Employees 10 000

யாழ். உட்பட நான்கு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

யாழ். உட்பட நான்கு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US