நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் வழமைப் போலவே வழங்கப்படும் என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷாணி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரையில் எவ்வித சலுகைக் குறைப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னுரிமையின் அடிப்படையில் வீடுகள்
இது குறித்து ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினருக்கான வீடுகளை பெற்றுக்கொள்வதற்காக இதுவரை 35 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையளிக்கப்பட்ட சுமார் 25 – 30 வீடுகள் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்ற நிலையில், எதிர்காலத்தில் இந்த வீடுகள் முன்னுரிமையின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.
மொத்தமுள்ள 108 வீடுகளில் ஆளுங்கட்சி எம்.பி.க்களுக்கு 80 வீடுகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு 28 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
