வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 286.31 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதியானது 295.04 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரொன்றின் கொள்முதல் பெறுமதியானது 203.23 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதியானது 212.09 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300.78 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 313.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன், ஸ்டெர்லிங் பவுன்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362.34 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 376.46 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 18 மணி நேரம் முன்
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri