பேஸ்புக் பயன்படுத்தும் மக்களுக்கு விசேட அறிவிப்பு
பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகளை 101 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என இலங்கை கணினி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
போலி பேஸ்புக் கணக்குகள், ஒன்லைன் மூலம் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்தல், ஹேக்கிங் மற்றும் பிற தவறான செயல்கள் தொடர்பில் அந்த இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முறைப்பாடுகளின் இரகசியத்தன்மை
பேஸ்புக் தொடர்பில் மாதாந்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முறைப்பாடுகளை எழுத்துப்பூர்வமாக மின்னஞ்சலில் அனுப்பலாம் என அவர் கூறியுள்ளார்.
மேலும் முறைப்பாடுகளின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
