பொலிஸாருக்கு வந்த இரகசிய தகவல்! இளம் பெண்கள் உட்பட 41 பேர் அதிரடியாக கைது
தெல்தெனிய - விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட பேஸ்பு விருந்துபசாரம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெண் சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தெல்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் வெளியான தகவல்
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 947 மில்லிகிராம் கஞ்சா, 3 கிராம் 657 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருள், 1 கிராம் 276 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 18 போதை மாத்திரைகள், 21 சட்டவிரோத சிகரெட்டுகள், 500 மில்லி லீட்டர் கொள்ளளவு கொண்ட 35 பியர் கேன்கள் மற்றும் 750 மில்லி லீட்டர் கொள்ளளவு கொண்ட 13 மதுபான போத்தல்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர்கள் 21 முதல் 40 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
அவர்கள் கெலியோய, அலுத்வத்தை, வரகாபொல, பேராதனை, அம்பிட்டிய, கண்டி மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர்கள் 22 முதல் 43 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் பல்லேகல, பேராதனை, ஹங்குரன்கெத்த, தெஹிவளை மற்றும் கட்டுக்கஸ்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21