பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் தீவிரமடைந்த மூன்று சூறாவளிகள் - இலங்கைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
உலக நாடுகள் பலவற்றை எல் நினோ தாக்கம் பாதித்துள்ள பின்னணியில் பசிபிக் பெருங்கடலில் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நேரத்தில் உருவான மூன்று சூறாவளிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்த சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக ஹவாய் தீவுகளுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இது நேரடியாக நிலப்பரப்பை தாக்காமல், முக்கியமாக ஹவாய் தீவுகளுக்கு மேற்கே நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இது பல நாடுகளையும் பாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதுடன், இது மணிக்கு 150 மைல் வேகத்தில் நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் பல மாவட்டங்களில் வறட்சி
இந்த எல் நினோ நிலைமை, இலங்கையின் பல மாவட்டங்களில் கடுமையான வறட்சியை ஏற்படுத்தி கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக, நாட்டின் 7 மாவட்டங்களில் கடுமையான வறட்சியான வானிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்கம் காரணமாக குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாமல் 35,000க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 115,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சூரியனின் நகர்வு
இதேவேளை, சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் (06) நண்பகல் 12:08 மணிக்கு பெந்தோட்டை, தினியாவல, இத்தக்கந்த, உடவலவை மற்றும் கதிர்காமம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
எனவே ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21