சர்வதேச விமான நிலையத்தில் பொருட்கள் விற்பனை: பொது மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலி பேஸ்புக் பக்கம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக விமான சேவை நிறுவனம் தகவல்கள் தெவிவித்துள்ளது.
இந்த முகப்புத்தக பக்கத்தின் ஊடாக உரிமை கோரப்படாத பொதிகள் விற்பனைக்கு இருப்பதாக கூறி தவறான தகவலைப் பதிவிட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பல்வேறு பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களுடன் கூடிய அந்த பொதிகளின் விலை 639 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோசடிகளில் சிக்க வேண்டாம்
இந்நிலையில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் எந்த வகையிலும் பயணப் பொருட்களை விற்பனை செய்யாது என அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், இதுபோன்ற மோசடிகளில் சிக்க வேண்டாம் என்றும் நிறுவனம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri