முகநூல் குழுக்கள் மீது தீவிர கண்காணிப்பு - பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை
முகநூல் (Facebook) ஊடாக ஏற்பாடு செய்யப்படும் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்களை அடையாளம் கண்டு கண்காணிப்பதற்காக பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் சிறப்பு உளவுத்துறை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
அண்மையில் தெல்தெனிய பொலிஸ் பிரிவுட்குட்பட்ட பகுதியில் முகநூல் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தொன்றை பொலிஸார் சோதனையிட்டு, அதில் பங்கேற்ற 41 இளைஞர் மற்றும் யுவதிகளை கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு
இவ்வாறான பல நிகழ்வுகள் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளினாலும், பாதாள உலகக்குழுக்களினாலும் வணிக ரீதியிலான இலாப நோக்கத்திற்காகவே நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவிக்காவல் அத்தியட்சகர் எஃப். யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

இதன்படி இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாவதை தடுக்க பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், பிள்ளைகளின் நடத்தை மற்றும் பேச்சில் திடீர் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பதைக்கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் நிலவும் போதைப்பொருள் பிரச்சினையின் தீவிரத்தை சுட்டிக்காட்டிய அவர், 2025 ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான சிக்கல்களால் 175 பேர் தற்கொலை செய்துகொண்டதாகவும் (172 ஆண்கள், 3 பெண்கள்) ஆவர்.
மேலும், 2026 ஆம் ஆண்டில் இதுவரை போதைப்பொருள் பயன்பாட்டினால் 11 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.