அமெரிக்காவில் விபத்துக்குள்ளான F35 போர் விமானம்! வெளியான பரபரப்பு காணொளி
அமெரிக்காவின்(USA) கலிபோர்னியாவில் விமானி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது F-35 போர் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது.
உயிர்தப்பிய விமானி
குறித்த சம்பவமானது இன்று(30) காலை சுமார் 6:30 மணியளவில், கலிபோர்னியாவின் பிரான்சிஸ்கோ நகரத்திலிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் விமானம் விபத்துக்குள்ளானது.
🚨#BREAKING: emergency officials are on the scene after a United States military f-35 jet has crash and burst into flames
— R A W S A L E R T S (@rawsalerts) July 31, 2025
📌#Fresno | #California
At this time military officials and emergency crews are currently on scene at Lemoore Naval Air Station in Fresno County,… pic.twitter.com/XCRg0BUv2y
விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு விமானி பெரசூட்டின் உதவியுடன் வெளியே குதித்து தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த விமானி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
சம்பவ இடத்தில் பற்றி எரியும் தீயை தீயணைப்பு வீரர்கள் சிரமமப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.





அமெரிக்காவுடன் மோதல்... எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை குறிவைக்கும் சீனா News Lankasri
