கண் வைத்தியர்கள் ஐவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை: ஒருவர் மரணம்! அத்தியட்சகரின் அதிர்ச்சி தகவல்கள்
தேசிய கண் வைத்தியசாலையின் ஐந்து அத்தியட்சகர்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அழுத்தம் காரணமாக பதவி விலகியுள்ளனர்.
அவர்களில் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என தற்போதைய அத்தியட்சகர் வைத்தியர் ஜயருவன் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கண் வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை தொடர்பில் நேற்று (29.01.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அழுத்தம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது தொடர்ந்து அழுத்தம் பிரயோகித்து வருவதாகவும், இது வைத்திய சேவைகளை முறையாக நடத்துவதற்கு தடையாக இருக்கிறது.
எனது வைத்தியசாலையில் இரண்டு மருத்துவர்கள் சமீபத்தில் முறையான நடைமுறைகளைப் பின்பற்றி இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், வேறு எந்த காரணத்திற்காகவும் இடமாற்றப்படவில்லை.

தேசிய கண் வைத்தியசாலைக்கு அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை நூற்று இருபத்தொன்று 121. தற்போது நூற்றியிருபத்தைந்து 125 வைத்தியர்கள் இங்கு பணிபுரிகிறார்கள்.
ஆனால் தேசிய கணக்காய்வு அறிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை நூற்று இருபத்து நான்கு (124) என எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தவர், அந்த அறிக்கையில் பிழை இருந்தால், அதை விசாரித்து சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri