உடன் வெளியேறுங்கள்! செல்ல வேண்டிய இடம் தொடர்பில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
களனி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மேவெல்ல, பெத்தியகொட, சிங்கரமுல்ல, பேலியகொட கங்கபத, வெலேகொட, ஹுணுபிட்டிய வடக்கு மற்றும் ஹுணுபிட்டிய தெற்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகள் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக களனி பிரதேச செயலாளர் ஜே.ஏ.டி.ஜி.எஸ். ரணசிங்க தெரிவித்தார்.
அடுத்த சில மணி நேரங்களில் களனி ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்று அவர் கூறினார்.
பாதுகாப்பான தங்குமிடங்கள்
களனி ரஜ மஹா விஹாரையில் உள்ள - விஹார மஹா தேவி யாத்திரை மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தங்குமிடங்களை நோக்கி உடனடியாக செல்லுமாறு களனி பிரதேச செயலாளர் மக்களை மேலும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பாதுகாப்பு தங்குமிடங்களாக,
❗ குருகுல கல்லூரி
❗ ஸ்ரீ தர்மலோக கல்லூரி,
❗ எச்.கே. தர்மதாச உயர்நிலைப் பள்ளி
❗ ஸ்ரீ ஜயதிலகராம விகாரை
❗ வெதமுல்ல மகா வித்தியாலயம்
❗ துடுகெமுனு மகா வித்தியாலயம்
❗ வெலிபாறை விகாரை உள்ளிட்ட இடங்கள் மாற்றப்பட்டுள்ளன.
எனவே, அபாய நிலையில் இருக்கும் மக்கள் உடனடியாக குறித்த பாதுகாப்பு தங்குமிடங்களை நோக்கிச் செல்லுமாற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, களனி பிரதேச செயலகப் பிரிவில் 4,000 குடும்பங்களைச் சேர்ந்த 21,000 பேர் அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan
உலகத் தமிழர்களை கோபப்படுத்தியுள்ள TVK கருத்து - ஈழத் தமிழர் ஆதரவில் இருந்து தடம் மாறுகிறாரா விஜய்? News Lankasri