சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக ஆகியோருக்கு விளக்கமறியல் நீடிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக ஆகியோரின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் ஒன்பதாம் திகதி நடைபெற்ற கோட்டா கோ கம தாக்குதல் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக மற்றும் டான்பிரசாத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விளக்கமறியல் நீடிப்பு
இந்நிலையில் நேற்றைய தினம் சனத் நிஷாந்த உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவினர் கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் எதிர்வரும் 8ஆம் திகதி வரை சனத் நிஷாந்த உள்ளிட்டோருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சனத் நிஷாந்த
மிலான் ஜயதிலக
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி |
