குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
அண்மைக்காலமாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாத இறுதியிலிருந்து இதுவரை கடவுச்சீட்டுக்காக அதிகளவான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக, திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியூமி பண்டார தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டுக்கான கேள்வி அதிகரிப்பு
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சேவையை வழங்குவதன் ஊடாகவே அதிகபட்ச கடவுச்சீட்டுகளை விநியோகிக்க முடியும். ஒரு நாள் சேவையினூடாக அதிகபட்சமாக 2,500 கடவுச்சீட்டுகளே விநியோகிக்கப்படும் என, திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சாதாரண நடைமுறையின் கீழ் கடவுச்சீட்டுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் மாதத்தில் அதிகரிப்பு
இதேவேளை, கடந்த மார்ச் மாதத்தில் 74,890 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஜனவரி, பெப்ரவரி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 50,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
2021ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 382,506 ஆக பதிவாகியுள்ளது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 11 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை யார் தெரியுமா Cineulagam
