கனடா புதிய நாடாளுமன்றில் இந்திய பெண்களுக்கு கிடைத்த உயர்பதவி
கனடாவின்(Canada) புதிய நாடாளுமன்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த், கமல் கேரா ஆகிய 2 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி(Mark Carney) சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுள்ளார்.
புதிய நாடாளுமன்றம்
இந்த நிலையில் கனடாவின் புதிய நாடாளுமன்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த், கமல் கேரா(Kamal Khera) ஆகிய 2 பெண்கள் அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
58 வயதான அனிதா ஆனந்துக்கு புதுமை, அறிவியல் மற்றும் தொழில்துறை மந்திரி பதவியும், 36 வயதான கமல் கேராவுக்கு சுகாதார மந்திரி பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்தின் பெற்றோர் மருத்துவர்கள் ஆவார்கள்.
அவர்கள் 1960ஆம் ஆண்டு கனடாவின் நோவா ஸ்கோடியாவில் உள்ள கென்ட்வில்லில் குடியேறியுள்ளனர்.
2 இந்திய பெண்கள்
அனிதா 2019ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தமை தொடர்ந்து அவர் ஓக்வில்லியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லிபரல் கட்சியின் மூத்த தலைவர்கள் குழுவில் அனிதா முக்கிய உறுப்பினராக உள்ளார்.
இதற்கு முன்பும் அவர் அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார். டெல்லியில் பிறந்த கமல் கேராவின் குடும்பம் அவர் பள்ளியில் படிக்கும்போதே கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ளது.
கமல் கேராடொராண்டோவின் யார்க் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.
நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களில் இளம் பெண்களில் கமல் கேராவும் ஒருவர் ஆவார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
