துப்பாக்கிகளை திருப்பி தருவதற்கான காலக்கெடுவை நீடித்த பாதுகாப்பு அமைச்சு
அரசாங்கத்தில் நிறைவேற்றுப் பதவிகளை வகித்த நாடாளுமன்றின் முன்னாள் உறுப்பினர்கள், மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை டிசம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு, குறித்த அதிகாரிகளுக்கு, இலங்கை பொலிஸ் மற்றும் இராணுவத்தினால் கணிசமான எண்ணிக்கையிலான துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் வழங்கப்பட்டுள்ளமை கண்றியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தொடர்புடையவர்கள், இந்த துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை 2024 டிசம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது.
காலக்கெடு நீடிப்பு
முன்னதாக, இந்தக் காலக்கெடு 2024 நவம்பர் 21ஆம் திகதி வரையிலேயே வழங்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது வெளிநாட்டில் உள்ள உரிமதாரர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அந்த காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறியுள்ள கனி மொத்தமாக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam