மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகனுக்கு விளக்கமறியல் நீடிப்பு
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி இன்று(23) காணொளி மூலம் குறித்த உத்தரவு விடுத்துள்ளார்.
இணையத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களைப் பதிவு ஏற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் கைது செய்யப்பட்டார்.
இவரை கடந்த மே மாதம் 3ஆம் திகதி ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைக்கப்பட்ட நிலையில், பொலிஸ் நிலையத்தில் வைத்து ஏறாவூர் பொலிஸார் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிறுத்தியதையடுத்து அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி
முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது கோவிட் காரணமாக
நீதிமன்றத்துக்கு அழைத்து வரமுடியாத காரணத்தினால் காணொளி மூலம் அவரை தொடர்ந்து
எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்
உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan