பயணக்கட்டுப்பாட்டை நீடிக்குக! ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு உத்தரவுகளை குறைந்தபட்சம் ஜூன் 28 வரை நீட்டிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதியிடம் வலியுத்தியுள்ளனர்.
ஜூன் 21 முதல் நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
எதிர்வரும் 21 ஆம் திகதி நாடு தழுவிய பயணக் கட்டுப்படுகளை நீக்கும் அரசாங்கத்தின் தீர்மானமானது கவலையளிப்பதாகவும் அவர்கள் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடு இன்னும் அன்றாடம் 2000 க்கும் மேற்பட்ட புதிய கோவிட் பதிவுகளையும் 50 உயிரிழப்புகளையும் பதிவு செய்து வருகின்றது.
இந் நிலையில் அரசாங்கத்தின் மேற்கண்ட தீர்மானம் மேலும் சிக்கலை தோற்றுவிக்கும். கோவிட்-19 வைரஸின் டெல்டா மாறுபாடு சமூகத்தில் பரவலாக இருப்பதற்கான ஆதாரங்களும் உள்ளன.
இந்த மாறுபாடு தற்போது ஆதிக்கம் செலுத்தும் மாறுபாட்டை விட ஐம்பது சதவீதம் அதிகமாக பரவக்கூடியது.
முடக்கலின் தளர்வு ஒரு சில நாட்களில் பரவலான ஆபத்தான பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதுடன், புதிய மாறுபாட்டின் பரவல் மூலம் முன்னோடியில்லாத அளவிற்கு கோவிட் தொற்றுகள் அதிகரிக்கக்கூடும் என்பதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்வடையும் என்றும் இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 16 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri