8000 கோடி இலஞ்சம் பெற்ற சிங்கள இலங்கையர்..! வெளிவரும் தகவல்
எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனத்திடமிருந்து நஷ்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்வதை தடுப்பதற்கு 8000 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சிங்கள இலங்கையர் யார் என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என பொதுஜன பெரமுனவின் சுயாதீன எதிரணி நாடாளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார்.
நாவலவிலுள்ள சுதந்திர மக்கள் சபை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கப்பல் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து 6.4 பில்லியன் டொலர் நஷ்டஈடு பெற்றுக் கொள்ள முடியும் என துறைசார் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.
வழக்கு தாக்கல் செய்து நஷ்டஈடு பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை தடுப்பதற்காக சிங்கள இலங்கையர் ஒருவருக்கு 250 மில்லியன் டொலர் அதாவது இலங்கை ரூபாப்படி 8000 கோடி ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கூறியுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,