கிளிநொச்சியில் வீடொன்றில் இருந்து பெருந்தொகையான வெடி பொருட்கள் மீட்பு!
கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் விசேட அதிரடிப்படையினர் பொலிஸாரின் உதவியுடன் மீட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை எறிகணை ஒன்றினை வீட்டுக்குள் வைத்து கிறைன்டரினால் வெட்டியபோது குறித்த எறிகணை வெடித்ததில் 25 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குறித்த வீட்டில் ஒரு சில வெடி பொருட்கள் அன்றைய தினம் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த வீட்டிலிருந்தும் வீட்டு வளவுக்குள் இருந்தும் பெருந்தொகையான வெடிபொருட்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கிளிநொச்சியில் வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு (PHOTOS)




25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
