கிளிநொச்சியில் வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு (PHOTOS)
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். கார்த்திகா உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேற்றிரவு (5) நேரடியாகச் சென்று பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான், குறித்த வீட்டு வளாகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆபத்தான வெடி பொருட்களையும் பார்வையிட்டு அவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றுமாறும் கட்டளையிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கிளிநொச்சியில் வெடிப்புச் சம்பவம் : ஒருவர் பலி (Photo)

