கிளிநொச்சியில் வெடிப்புச் சம்பவம் : ஒருவர் பலி (Photo)
கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் மர்மப்பொருள் ஒன்றை பரிசோதித்தபோது அது வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தின் போது 13 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (05) பிற்பகல் 3.30 மணியளவில் மர்மப் பொருள் ஒன்றை கிரைண்டர் ஒன்றினால் வெட்டியபோது குறித்த பொருள் வெடித்துள்ளது.
இச்சம்பவத்தின் போது சிவலிங்கம் யுவராஜ் ( வயது 25) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேலும், வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டை சூழவுள்ள வீட்டின் சில பகுதிகளிலும் ஆபத்தான வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
குறித்த பகுதியில் மர்ம பொருள் ஒன்றை பரிசோதிக்கும் போது அந்த பொருள் வெடித்துள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலதிக விபரங்கள் விரைவில்..









உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan