புதுக்குடியிருப்பில் விடுதலை புலிகளின் கொடி மீட்பு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியிலிருந்து வெடிபொருட்களுடன் விடுதலை புலிகளின் கொடி மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் ஆ பகுதியிலுள்ள 168ஆம் இலக்க தென்னம் தோட்ட காணியினை உரிமையாளரினால் துப்பரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது காணியில் ஆர்.பி.ஜி ரக குண்டுகள், விடுதலை புலிகளின் கொடி போன்றவை இருந்துள்ளதை கண்டுள்ளார்.
சோதனை நடவடிக்கை
இதையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் காணியின் உரிமையாளரினால் நேற்று (01.09.2025) காலை முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப்பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 8 மணி நேரம் முன்
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri