கிளிநொச்சியில் வெடிக்காமல் காணப்படும் மிதி வெடிகள்! அச்சத்தில் கிராமக்கள்
கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவன்கொட்டி பகுதியில் கடந்த 15 வருடங்களாக வாசித்து வரும் மக்கள் தமது பகுதியில் தற்பொழுதும் சில பகுதிகளில் வெடிக்காத நிலையில் கண்ணிவெடிகள் இனங்காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தமது பகுதியில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் தமது நாளாந்த கடமைகளை முன்னெடுப்பதிலும் மற்றும் சிறுவர்கள் விளையாடச் செல்வதிலும் பெரும் அச்ச நிலைமையை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே மீண்டும் ஒருமுறை எமது பகுதியில் மனிதநேய கண்ணீர் வெடி அகற்றும் பணியினர் தமது பணியினை மீளவும் ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில்,
தமது பகுதியில் 100 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் தமது பகுதியில் இருந்து எந்த ஒரு அவசர தேவை கருதியும் செல்வதாயின் போக்குவரத்து வசதிகள் இன்மை காரணமாக தனியார் வாகனங்களிலே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



