விக்டோரியா வனப்பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு
கண்டி - பதியபெலெல்ல வீதியின் விக்டோரியா வனப்பகுதியில் இருந்து வெடிபொருட்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிபொருட்களில் கறை படிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் வெடிகுண்டு ஒன்றும், 9 LMG தோட்டாக்களும், 50 மில்லிமீட்டர் விமான எதிர்ப்பு தோட்டாவும், 3 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெடிபொருட்கள் செயலிழக்கம்
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட வெடிபொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ள்ளன.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
