மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவுள்ள மகிந்தவின் சகா
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நண்பராக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை குற்றச்சாட்டு ஒன்றில் இருந்து விடுவித்த தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மிஹின் லங்கா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த காலத்தில் அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் 883 மில்லியன் நிதி இழப்பு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு வழக்குத் தீர்ப்பையே மேன்முறையீட்டு நீதிமன்றம் நிறுத்தியுள்ளது.
மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம் தாக்கல் செய்த திருத்த விண்ணப்பத்தை பரிசீலித்த பின்னர், நீதியரசர்களான குணரத்ன மற்றும் அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
2027 ஜூன் 27, முதல் 2008 மே 29, வரையான காலப்பகுதியில் அரச கொள்முதல் நடைமுறைகளை மீறி ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து உபகரணங்களை வாங்கியதன் மூலம் நிதி இழப்பை ஏற்படுத்தியதாக குணவர்தன மீது குற்றம் சாட்டப்பட்;டுள்ளது.
முன்னதாக, மேல் நீதிமன்றத்தின் விசாரணையின் போது, குற்றப்பத்திரிகை குறைபாடுடையது என்று குணவர்தனவின் சட்டத்தரணிகள் ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்பிய நிலையிலேயே அவரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்திருந்தது.
இந்தநிலையில் தற்போது மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டப்பூர்வமாக பொருத்தமற்றது என்று கண்டறிந்த நிலையில், வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
