முல்லைத்தீவில் வெடிப்பு சம்பவம்: இருவர் படுகாயம் (Photos)
முல்லைத்தீவு- மாங்குளம் பகுதியில் இனம்காணப்படாத வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று(07.09.2023) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாங்குளம் நீதிபுரம் பகுதியை சேர்ந்த இருவரும் விறகு எடுப்பதற்காக சென்ற போதே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த சம்பவத்தில் மாரிமுத்து மணியம் (84 வயது) என்பவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சம்பவத்தில் படுகாயமடைந்த பார்த்தீபன் நிதர்சன் (06வயது) எனும் சிறுவன் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
