வெளிநாடொன்றில் இராணுவ தளவாடக் கிடங்கில் வெடிவிபத்து: பலர் பலி
புருண்டி- புஜும்புராவில் உள்ள இராணுவ தளவாடக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தொடர் வெடிவிபத்துகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, 57 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முசாகா பகுதியில் அமைந்துள்ள இந்த இராணுவக் கிடங்கில் மின் கசிவு காரணமாகத் தீப்பரவல் ஏற்பட்டதையடுத்து இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
இறுதிக்கட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர்! குறிவைக்கப்பட்ட ஈரானின் எஞ்சிய பகுதி - தொடரும் அமெரிக்காவின் எச்சரிக்கை
வெடிவிபத்து
இந்த வெடிப்பின் வீரியம் காரணமாக, சுமார் 5 கிலோமீற்றர் தூரம் வரை வெடிகுண்டின் சிதறல்களும் இடிபாடுகளும் தூக்கி வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அந்த பகுதியில் இருந்த குடியிருப்புகள், தனியார் வாகனங்கள் மற்றும் ராணுவக் கட்டடங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் மூன்று இராணுவ வீரர்களும் அடங்குவர். இராணுவக் கிடங்கிற்கு அருகிலேயே எம்பிம்பா (Mpimba) மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளதால், அங்குள்ள கைதிகளும் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை! இலங்கையின் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்புகளில் சிக்கல்
இரங்கல்
வெடிவிபத்தைத் தொடர்ந்து நகரம் முழுவதும் புகைமூட்டமாகக் காணப்பட்டதால், பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் அந்த நகரத்தில் பெரும் பீதி ஏற்பட்டது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்த நாட்டு எவரிஸ்டே நடயிஷிமியே தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் பொதுமக்கள் அமைதி காக்குமாறும், வெடிக்காத வெடிகுண்டுகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறும் இராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.