கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட பால் மா விற்பனை நிலையம்
புறக்கோட்டை பிரதேசத்தில் இயங்கி வந்த பால் மா விநியோக நிலையமொன்றை நுகர்வோர் அதிகார சபையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று (22.12.2023) புறக்கோட்டையில் உள்ள மொத்த விற்பனை நிலையங்களில் விசேட சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 825 கிலோகிராம் காலாவதியான பால் மா தொகை கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
விற்பனையாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஐஸ்கிரீம் மற்றும் இனிப்பு விற்பனையாளர்களே காலாவதியான பால் மாவை எடுத்துச் செல்வது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மொத்த விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை நுகர்வோர் அதிகாரசபை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
You may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 37 நிமிடங்கள் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
