தென்னிலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட சித்திரவதை கூடம் : அதிர்ச்சியில் பொலிஸார்
தென்னிலங்கையில் வீடொன்றில் செயற்பட்டு வந்த சித்திரவதை கூடம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
களுத்துறையில் போதைப்பொருள் தொடர்பான பணத் தகராறு காரணமாக நபர் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கிய கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை, கலமுல்ல, லாகோஸ்வத்த பிரதேசத்தில் வைத்து 18, 20, 25, 27 மற்றும் 28 வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பி ஓடிய பலர்
அந்தப் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, வீடு புகுந்த போது வீட்டில் இருந்த பலர் தப்பி ஓடியுள்ளனர்.
இதன்போது வீட்டில் கை கால்கள் கட்டப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இளைஞனை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.
அந்த வீடு சித்திரதைக்கூடம் போன்று செயற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சோதனையின் போது இளைஞனை தாக்கிய 3 கூரிய வாள்கள், போதைப் பொருட்கள் அடங்கிய சிறிய பொதிகள், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மற்றும் பொதியிடும் பொருட்கள் என்பன காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
