பாடசாலை உள்ளிட்ட பகுதிகளில் விற்கப்பட்ட ஐஸ்கிறீம் கோன்கள் குறித்து அதிர்ச்சி தகவல்
வவுனியா - நொச்சிமோட்டை பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்களின் சோதனை நடவடிக்கையின் போது காலாவதியான 750க்கும் மேற்பட்ட ஐஸ்கிறீம் கோன்கள் விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காலாவதியான ஐஸ்கிறீம் கோன்கள்
கடந்த ஒரு மாத காலமாக வவுனியாவில் பாடசாலைகள் உட்பட பல்வேறு பகுதிகளில் வாகனம் ஒன்றில் கொண்டு சென்று இத்தகைய காலாவதியான ஐஸ் கிறீம் கோன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

இது குறித்துக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில், வவுனியா அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சோதனையின் போது நொச்சிமோட்டை பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 750க்கும் மேற்பட்ட காலாவதியான ஐஸ்கிறீம் கோன்கள் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளைச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri