நள்ளிரவில் மயானத்திலிருந்து இரகசியமாக தோண்டியெடுக்கப்பட்ட இளைஞர்களின் சடலங்கள் - சிக்கிய கும்பல்
கொஸ்கம - பரணகம மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு இளைஞர்களின் சடலங்கள் தோண்டப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 16 ஆம் திகதி கொஸ்கம - தவல்கொட ஓடையில் நீராடச்சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து, அவர்களது உடல்கள் கொஸ்கம - பரணகம பொது மயானத்தில் புதைக்கப்பட்டன.
விசாரணையில் வெளியான தகவல்
இந்நிலையில், அடையாளம் தெரியாத சிலர் சடலங்களை சுமார் 2 அடி ஆழத்திற்கு தோண்டி எடுத்துச்சென்றுள்ளதாக உயிரிழந்தவர்களின் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மயானத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராக்களை சோதித்த போது மயானத்திலிருந்து லொரியொன்றும், மோட்டார் சைக்கிளும் ஏதோவொன்றை ஏற்றிசெல்வது கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் லொரியில் பயணித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விசாரணையின் போது, தனது மனைவியின் உடல்நலக்குறைவு காரணமாக சில சடங்குகளை செய்ய தாம் திட்டமிட்டிருந்ததாகவும், அதில் மஹியங்கனை பகுதியை சேர்ந்த கும்பல் ஒன்று பங்கேற்றதாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, சம்பந்தப்பட்ட கும்பலை கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கொஸ்கம பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam