மட்டக்களப்பு மாநகரசபை இலங்கைக்கு முன்னுதாரணமாக விளங்குவதாக முதல்வர் தெரிவிப்பு
மட்டக்களப்பு மாநகரசபை எந்தவித ஊழல்களும் அற்ற நிலையில் இலங்கைக்கு முன்னுதாரணமான ஒரு மாநகரசபையாக விளங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாரியளவிலான அபிவிருத்தி திட்டங்களையும் செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 19ஆம் திகதியுடன் உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரங்கள் விசேட ஆணையாளர்களுக்கு வழங்கப்படும் என தேர்தல் திணைக்களம் அறிவித்திருந்த நிலையில் மாநகரசபையின் இறுதி நாளாக கருதி நேற்றைய தினம் (17.03.2023) மாநகரசபை முதல்வரினால் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாநகரசபை
இதில் வைத்து கருத்து தெரிவித்த போதே முதல்வர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாநகரசபையினை பொறுப்பேற்ற போது அதற்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் பாரியளவிலான சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளையும், ஊழல்களையும் செய்திருந்த காரணத்தினால் அவற்றினை சரிசெய்து முன்னேறவேண்டிய சூழல் இருந்து வந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறப்பான முறையில் இலங்கையின் முன்மாதிரியான
மாநகரசபையாக மட்டக்களப்பு மாநகரசபையை முன்னெடுத்துவந்த நிலையில் அதனை தடுப்பதற்காக பல்வேறு
பிரயத்தனங்களை இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் முன்னெடுத்துவதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
