நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையால் இனியும் அழிவு ஏற்பட கூடாது: டலஸ் அழகப்பெரும
நாட்டுக்குப் பொருத்தமான அரசமைப்பு ஒன்றை உருவாக்கி, அந்த அரசமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என சுதந்திர மக்கள் சபையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையால் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட அழிவு இனியும் ஏற்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன்.

நிறைவேற்று அதிகாரம்
நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக்கொண்டு இப்போது ரணில் விக்ரமசிங்க செய்வதைப் பாருங்கள்.
தேர்தல்கள் ஆணையாளர் தேர்தலை அறிவிக்கின்றார். ரணில் இல்லை என்கின்றார்.
இந்நிலையில் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தியே ரணில் இவ்வாறு செய்கின்றார்.

நிறைவேற்று அதிகாரம் இந்த நாட்டுக்குச் செய்த அநியாயம் அதிகம். நான் ஜனாதிபதியாகி இருந்தால் இறுதி நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி நானாகத்தான் இருந்திருப்பேன்.
கடந்த 1994ஆம் ஆண்டிலிருந்து போட்டியிட்ட எல்லா ஜனாதிபதி வேட்பாளர்களும் முதலில் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் என்பதுதான். ஆனால், எந்த ஜனாதிபதியும் அதைச் செய்ததில்லை.

நாட்டுக்குப் பொருத்தமான அரசமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அந்த அரசமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும்.
ரணில், மகிந்த, மைத்திரி, சந்திரிகா இப்படி எல்லோருக்கும் சொல்கின்றேன். மீண்டும் ஜனாதிபதியாவதற்கு முயற்சிக்க வேண்டாம்.
அடுத்த தலைமுறையிடம் நாட்டை ஒப்படைப்போம். இப்போது நாட்டுக்குத் தேவை புதிய முறைமையாகும் என வலியுறுத்தியுள்ளார்.
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam