இலங்கையிலிருந்து இரவோடு இரவாக அனுப்பப்பட்ட கடிதம்! உயரும் ரூபாவின் பெறுமதி - ரணில் வெளியிட்ட அறிவிப்பு (Live)

International Monetary Fund Parliament of Sri Lanka Ranil Wickremesinghe
By Mayuri Mar 07, 2023 06:24 AM GMT
Report

உரம் வழங்குவதன் மூலம் சிறு மற்றும் பெரும் போகங்களில் வெற்றிகரமான அறுவடையை நாடு பெற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விவசாய உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி இயல்பு நிலைக்கு வந்துள்ளது.

பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல், தடையில்லா மின்சார விநியோகம், விவசாயிகளுக்கு உரம், சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிக நிதி வழங்குதல் என்பவற்றுக்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

வரிக் கொள்கைகள் மீள நடைமுறை

இலங்கையிலிருந்து இரவோடு இரவாக அனுப்பப்பட்ட கடிதம்! உயரும் ரூபாவின் பெறுமதி - ரணில் வெளியிட்ட அறிவிப்பு (Live) | President Ranil Wickramasighe Parliament Speech

திடீர் வரிநீக்கம், அரசாங்கத்தின் வருமானம் குறைய காரணமானது. வருமானத்தை அதிகரிப்பதற்காக 2019இல் நடைமுறைப்படுத்தப்பட்ட வரிக் கொள்கைகள் மீள நடைமுறைப்படுத்தப்பட்டன.

2022ஆம் ஆண்டில், நாட்டில் ஏற்பட்ட சாதகமற்ற சூழ்நிலைகள் காரணமாக சுற்றுலாத்துறை பின்னடைந்தது. எவ்வாறாயினும், இந்த ஆண்டு நிலைமை சீரடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. 

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு மிகவும் கடினமான பல பொருளாதார நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது.

தற்போது பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதனால் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்படும் கஷ்டங்கள் தொடரும்.

அத்துடன், சீன எக்சிம் வங்கியிடமிருந்து நிதி உறுதிக்கான கடிதம் நேற்றிரவு அரசாங்கத்திற்கு கிடைத்தது. பின்னர் மத்திய வங்கி ஆளுநருடன் ஆலோசித்து, அது குறித்த இணக்க கடிதத்தை அன்றிரவே சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பியுள்ளோம்.

அனைத்து இரு தரப்பு கடன் கொடுநர்களும் நிதியியல் உறுதிபாடுகளை வழங்கியுள்ளனர். அதற்கமைய, இந்த மாத இறுதிக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்க பெறும் என நம்புகிறேன்.

பலதரப்பு மற்றும் வணிகக்கடன்கள்

இலங்கையிலிருந்து இரவோடு இரவாக அனுப்பப்பட்ட கடிதம்! உயரும் ரூபாவின் பெறுமதி - ரணில் வெளியிட்ட அறிவிப்பு (Live) | President Ranil Wickramasighe Parliament Speech

இருதரப்பு கடன்கள் தற்போது செலுத்தப்படுவதில்லை. பலதரப்பு மற்றும் வணிகக்கடன்கள் மட்டுமே செலுத்தப்படுகிறன.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியத்துடனான ஒப்பந்தம் முறியுமாயின், வெளிநாடுகள் மற்றும் தனியார் வங்கிகளில் பெற்ற கடனை செலுத்த வேண்டி ஏற்படும். 2029 ஆம் ஆண்டு வரை 6 - 7 பில்லியன் கடன் செலுத்த வேண்டியுள்ளது.

எனவே, இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாகும். தற்போது, பொருளாதாரத்தை மீட்சிப்பாதைக்கு இட்டுச்செல்கின்றோம்.

கடந்த 7 - 8 மாதங்கள் மிகவும் கடினமானதாக அமைந்தது. வரிச்சுமை அதிகரித்துள்ளதாக தொழில் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

குறுகிய காலத்துக்கு இதனை தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். இந்த நிலைமைய, மக்களும், தொழிற்சங்கங்களும் புரிந்துகொள்ள வேண்டும். இதனை புறக்கணித்தால் தற்போதையதை விட நிலைமை மிகவும் மோசமாக அமையும்.

கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிப்பதுடன் அமைதியான ஆர்ப்பாட்டங்களும் இடமளிக்கிறோம். அதனை விடுத்து, ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள மூலம் இந்த நடவடிக்கையை குழப்ப நினைப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்.

இதேவேளை, தற்போது டொலருக்கு நிகரான ரூபா பெறுமதி உயர்கிறது. இதுவரை நாம் கொடுத்த உழைப்புகளின் பிரதிபலனே இதுவாகும் என குறிப்பிட்டுள்ளார். 


மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US