இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம்(Photos)
இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது மாவட்டங்களுக்குப் பொறுப்பான சங்க நிர்வாகிகள் மற்றும் வலயங்களுக்குப் பொறுப்பான நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டதுடன், கௌரவிப்பு நிகழ்வுகளும் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஷெகான் திசாநாயக்க, சங்கத்தின் மேலதிக செயலாளர் நாலக டி சில்வா மற்றும் சங்கத்தின் வடக்கு, கிழக்கு மாகாண செயலாளர் ஜீவராசா.ருபேஷன், சங்கத்தின் கிழக்கு மாகாணத்திற்கான செயலாளர், கோபாலசிங்கம் சுஜிகரன், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ந.காஞ்சீவன் மற்றும் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் உள்ளிட்ட பலர் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிருவாகிகள் தெரிவைத் தொடர்ந்து ஆசிரியர்களின் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாகச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.
இதில் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் தடைப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இது தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடித் தீர்வை
பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை அரச ஆசிரியர்
சங்கத்தின் பிரதான செயலாளர் ஷெகான் திசாநாயக்க தெரிவித்தார்.



ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan