வடக்கில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் ஹன்சிகா சதீஸ்குமார் என்ற மாணவி 180 புள்ளிகளை பெற்று முதல்நிலை பெற்றுள்ளார்.
குறித்த மாணவி மு/புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும்நிலையில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த மாணவி தனது எதிர்கால இலட்சியம் வைத்தியராகுவது என தெரிவித்துள்ளார். அத்துடன் தனக்கு கற்பித்த பெற்றோர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், சக மாணவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால்
2022ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் முள்ளிவாய்க்கால் கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் கின்சிலி பெர்னாண்டோ லிபின்ரன் சாதனைப் படைத்துள்ளார்.
142 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.
குறித்த மாணவன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பல்வேறு நெருக்கடி நிலைமைகளுக்குள்ளும் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய பெற்றோர், தனக்கு கற்பித்த ஆசிரியர்கள், பாடசாலை அதிபர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
அத்தோடு எதிர்காலத்தில் தான் ஒரு சட்டத்தரணியாக வந்து மக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க உழைக்கபோவதாக குறித்த மாணவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
