செம்மணி புதைகுழி அகழ்வு: இன்றுடன் 339 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம்(9.6.2026) 21 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இன்றுடன் 339மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 318 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இன்றையதினம் 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன.மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என சட்டத்தரணி தெரிவித்தார்.
அகழ்வுப்பணி
றுகுணு பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.