விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடிய சிஐடியினருக்கு கிடைத்த ஏமாற்றம்..!
முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி தோண்டும் நடவடிக்கை ஒன்று நேற்றையதினம்(4) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலைவீதியில் வலைஞர்மடம் சந்திக்கு அருகில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் புதைத்து வைத்திருப்பதாக நம்பப்படும் இரகசிய தகவல் கொழும்பில் இருந்து வந்த குற்றப்புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைய நீதிமன்ற அனுமதியுடன் தோண்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அகழ்வுப்பணி
கனரக இயந்திரம்கொண்டு குறித்த பகுதி 15 அடிக்கு மேல் தோண்டியும் எதுவும் கிடைக்காத நிலையில் தண்ணீர்தான் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அகழ்வுப்பணியினை கைவிட்டுள்ளார்கள்
குறித்த பகுதிக்கு அண்மையில் ஏற்கனவே பாரிய படைமுகாம் ஒன்று போரிற்கு பின்னர் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri