பரீட்சை கொடுப்பனவுகள் வழங்குவதில் காலதாமதம்: உத்தியோகத்தர்கள் விசனம்
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் கடந்த காலங்களில் நடத்தப்பட்ட பரீட்சைகளுக்கான கடமையில் ஈடுபட்ட உத்தியோகஸ்தர்களுக்கு பரீட்சை கொடுப்பனவுகளை காலதாமதமின்றி விரைவாக வழங்குமாறு பரீட்சைக் கடமையில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரீட்சைக் கடமையில் ஈடுபட்ட பரீட்சை மேற்பார்வையாளர்கள், உதவி பரீட்சை மேற்பார்வையாளர்கள், மேலதிக பரீட்சை மேற்பார்வையாளர்கள் மற்றும் நோக்குநர்களுக்கான பரீட்சை கொடுப்பனவுகளை விரைவாக வழங்குமாறு பரீட்சைக் கடமையில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் கடந்த வருடம் (2021) நடத்தப்பட்ட பல போட்டிப்பரீட்சைகள், வினைத்திறன் பரீட்சைகள், க.பொ.த சாதாரண செய்முறை பரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நிலையக்கடமை, மதிப்பீட்டு பணிகள் மற்றும் வங்கிகளினால் நடத்தப்பட்ட பரீட்சை உட்பட ஏனைய பரீட்சைக் கடமையில் ஈடுபட்டவர்களுக்கான கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டும். நாட்டிலே நாளாந்தம் கூலித்தொழிலில் ஈடுபடும் தொழிலாளியின் நாளாந்த வேதனம் 2500 ரூபா வழங்கப்படும் இன்றைய சூழ்நிலையில் காலை முதல் மாலை வரையும் நடைபெறும் பரீட்சைக்கான கொடுப்பனவு போதாது என அவர்கள் விசனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குள் மத்தியில் இவ்வாறு பரீட்சையில் கடமையில் ஈடுபட்ட மேற்படி உத்தியோகத்தர்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளார்கள்.
நாட்டில் பொருட்களின் அதீத விலையேற்றம், எரிபொருளின்
விலையேற்றம் மற்றும் எரிவாயு, கோதுமை மா உட்பட மனித பாவனைக்கு பயன்படுத்தப்படும்
அனைத்து பொருட்களின் விலையேற்றத்தினால் இவ்வாறு பரீட்சை கடமையில் ஈடுபட்ட
உத்தியோகத்தர்கள் பணப்பிரச்சினை சம்பந்தமாகவும், பிள்ளைகளின் அடிப்படைத்தேவைகள்,
உணவுத்தேவைகள், மங்கல அமங்கல நிகழ்வுக்கான செலவுகள் அதிகரிப்புகள் உள்ளிட்ட பல
பிரச்சினைகளில் திணறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
