சொத்து விபரங்களை வெளியிடுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணிப்புரை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
ஒன்பதாவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் , அதன் உறுப்பினர்களாக இருந்தவர்கள் தங்களின் சொத்து விபரங்களை எதிர்வரும் இரண்டு வார காலங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் கலைப்பு
அதன் பிரகாரம் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னதாக அவர்கள் தங்கள் சொத்து விபரங்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் கையளிக்க வேண்டும்.
முன்னதாக வருட இறுதியில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் சொத்து விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதன் காரணமாக தற்போதைக்கு இம்மாத இறுதிக்குள் அவர்களின் சொத்து விபரங்கள் கோரப்பட்டுள்ளதாக இலஞ்ச, ஊழல் தடுப்பு ஆணைக்குழு தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |