குற்றவாளிகளை தண்டிக்க அரசாங்கத்திற்கு திறன் இல்லை: சிறிநேசன் தெரிவிப்பு

Batticaloa Gotabaya Rajapaksa Journalists In Sri Lanka Eastern Province
By Rusath Jun 01, 2024 10:48 AM GMT
Report

இலங்கை அரசாங்கத்திற்கு குற்றவாளிகளுக்கு தண்டிக்கும் அளவு திறன் இல்லாததால் சர்வதேச விசாரணை ஒன்றாலேயே தீர்வு காண முடியும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் ( Gnanamuthu Srineshan) தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் (Batticaloa) படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் (Iyyadurai Nadeshan) 20ஆவது ஆண்டு நினைவேந்தலையொட்டி நேற்று (31.05.2024) இடம்பெற்ற நிகழ்வில் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அவர் மேலும் கூறுகையில், 

"சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் படுகொலை செய்யப்பட்டு 20 வருடங்கள் கழிந்திருக்கின்றன. அதற்கு உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக எந்தவொரு விசாரணையும் நடத்தப்படவில்லை.

ஒலிம்பிக் மைதானத்தில் நடாத்தபடவிருந்த தாக்குதல்: தடுத்து நிறுத்திய பிரெஞ்சு பொலிஸார்

ஒலிம்பிக் மைதானத்தில் நடாத்தபடவிருந்த தாக்குதல்: தடுத்து நிறுத்திய பிரெஞ்சு பொலிஸார்

அரசாங்கத்தின் ஆதரவு  

மேலும், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவும் இல்லை. ஆனால், அந்தக் குற்றவாளிகளை அனேகமாக கண்டவர்கள் உள்ளார்கள்.

குற்றவாளிகளை தண்டிக்க அரசாங்கத்திற்கு திறன் இல்லை: சிறிநேசன் தெரிவிப்பு | Ex Mp Srineshan Speech On Iyadurai Nadeshan

யோசப் பரராசசிங்கம், சந்திரநேரு, ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட போதும் குற்றவாளியை அடையாளம் கண்டிருக்கின்றார்கள். ஒரு குள்ளமான உருவம் அந்த குற்றவாளியாக இனம் காணப்பட்டிருக்கின்றது.

ஆனால், அவர்களை வெளிக்கொணர்வதற்கு மற்றவர்கள் பயம் கொள்கின்றார்கள். எனவே, அரசு குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.

குற்றவாளிகளை தண்டிக்க அரசாங்கத்திற்கு திறன் இல்லை: சிறிநேசன் தெரிவிப்பு | Ex Mp Srineshan Speech On Iyadurai Nadeshan

மேலும், இலங்கையில் உள்நாட்டுப் பொறிமுறையின் மூலமாக கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்குகோ, காணாமலாக்கப்பட்டவர்களுக்கோ, இனப்பிரச்சினைக்கோ, எந்தவொரு தீர்வும் காணப்படவில்லை. இந்த நாட்டில் உள்நாட்டுப் பொறிமுறை என்பது வெறும் பொய் வார்த்தையாக தான் இருக்கின்றது.

எனவே, இப் பிரச்சினைகளுக்கெல்லாம் சர்வதேச பொறிமுறைய ஊடாகத்தான் தீர்வு காணப்படல் வேண்டும். காணாமல் போனவர்களை மறந்து விடுங்கள் என கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) வெற்றி பெற்றதன் பின்னர் கருத்து தெரிவித்திருந்தார்.

விசா இன்றி தாய்லாந்துக்கு செல்ல இன்று முதல் அனுமதி

விசா இன்றி தாய்லாந்துக்கு செல்ல இன்று முதல் அனுமதி

 உரிய தண்டனை

அதேபோல், காணாமல் போனவர்களை மண்ணைத் தோண்டிப் பாருங்கள் என விமல் வீரவம்சவும் தெரிவித்திருந்தார்.

குற்றவாளிகளை தண்டிக்க அரசாங்கத்திற்கு திறன் இல்லை: சிறிநேசன் தெரிவிப்பு | Ex Mp Srineshan Speech On Iyadurai Nadeshan

இந்நிலையில், தமிழர்களின் பிரச்சினை சோறும் தண்ணீரும் என மகிந்தானந்த தெரிவித்திருந்தார். எனவே, 75 வருடங்களாக அவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளை ஒரு அற்ப சொற்பமானவையாக தான் விளங்கி வைத்திருக்கிறார்கள். 

மேலும், இலங்கை அரசாங்கம் இவ்வாறான குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கக் கூடிய அளவிற்கு திறத்துடன் இல்லை என்று கூறலாம்.

குற்றவாளிகளை தண்டிக்க அரசாங்கத்திற்கு திறன் இல்லை: சிறிநேசன் தெரிவிப்பு | Ex Mp Srineshan Speech On Iyadurai Nadeshan

எனவே, சர்வதேச விசாரணை ஒன்றே தான் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கும், அவர்கள் தண்டிக்கப்படுவதற்கும் ஒரே வழியாக இருக்கும்.

இந்த நாட்டில் சட்டம் இருவகையாக இருக்கின்றது. தமிழர்களுக்கு ஒருவகையாகவும், தென்னிலங்கையர்களுக்கு ஒரு வகையாகவும் இருக்கின்றது. எனவே, சட்டம் முறையாக கடைப்பிடிக்கப்படல் வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.  

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US