விசா இன்றி தாய்லாந்துக்கு செல்ல இன்று முதல் அனுமதி
நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கை சுற்றுலாப் பயணிகள் இன்று (01) முதல் விசா இன்றி தாய்லாந்துக்கு(Thailand) செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி 60 நாட்களுக்கு விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான விசா ஊக்குவிப்புகளை வழங்க தாய்லாந்து அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது.
விசா திட்டங்கள்
இந்த நடவடிக்கைகளில் இலவச விசா மற்றும் ஒன் அரைவல் விசா திட்டங்கள், மாணவர்கள் நீண்டகாலம் தங்குதல் மற்றும் ஓய்வு பெற்றவர்க ளுக்கு கட்டாய சுகாதார காப்பீடு ஆகியவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
அல்பேனியா, கம்போடியா, சீனா, இந்தியா, ஜமைக்கா, கஜகஸ்தான், லாவோஸ், மெக்சிகோ, மொரோக்கோ, பனாமா, ருமேனியா, இலங்கை மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 36 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுடன், இலங்கை சுற்றுலாப் பயணிகளும் விசா இன்றி தாய்லாந்துக்கு செல்ல முடியும்.
இந்த விரிவாக்கம், விசா இல்லாத நுழைவுக் கான தகுதியுள்ள நாடுகளின் எண்ணிக்கையை 57 இலிருந்து 93ஆக தாய்லாந்து அதிகரித்துள்ளது.
இது தாய்லாந்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நடவடிக்கை என்று தாய்லாந்து அரசு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |