முன்னாள் அமைச்சர்கள் பலரை குறிவைத்துள்ள அரசாங்கம்! விரைவில் கைதாகலாம்..
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் சில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலஃபர் தெரிவித்துள்ளார்.
மன்னார் உப்புக்குளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வன்முறை அரசியல்
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“இன்னும் ஒரு சில தினங்களில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் இடம் பெற உள்ளது. நான் தற்போதைய ஒரு பிரதி அமைச்சர்.நான் எனது வாகனத்தில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வி.ஐ.பி லைட்டை பயன்படுத்தவில்லை.
நான் தான் இந்த ஏரியாவின் அரசியல் வாதிகள் என்று காட்டுவதற்காக வி.ஐ.பி.லைட்டை பயன்படுத்துகின்றனர். வேறு கட்சியை சேர்ந்தவர்கள் தாராபுரம் போனால் அடிப்பார்கள் என்று கூறினார்கள். நான் தாராபுரம் போனது எவ்வித கலந்துரையாடலுக்கும் இல்லை.
முன்னாள் அமைச்சர்கள் கைது
இந்த நாட்டிலே வன்முறை அரசியல் இல்லாமல் போகும்.திருட்டு அரசியல் இல்லாமல் போகும்.தற்போது நிறைய அரசியல்வாதிகள் பயந்து போய் உள்ளனர். நிறைய பேரின் கோப்புகள் மேலே வந்துள்ளது.
இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் சில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
மக்கள் சொத்துக்களை திருடியவர்கள்,மக்களின் சொத்துக்களை தவறாக பயன்படுத்தியவர்கள்,மக்களை அச்சுறுத்தியவர்களுக்கு நாங்கள் நிச்சயமாக அதற்கான தண்டனையை வழங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |