அடுத்த பாப்பரசர் யார்..! வெளியாகியுள்ள கருத்துகணிப்பு..
கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவை தொடர்ந்து புதிய பாப்பரசர் யார் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது.
அதன்படி கர்தினால்கள் கூட்டம் இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், புதிய பாப்பரசரை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் கான்கிளேவை (மாநாடு) அடுத்த மாதம் (மே) 7ஆம் திகதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய பாப்பரசர்
உலகம் முழுவதும் 252 கார்டினல்கள் உள்ள நிலையில், பாப்பரசரை தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி படைத்த 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 135 பேர் ஆவர். இவர்கள் தங்களுக்குள்ளே இருந்து ஒருவரை புதிய பாப்பரசர் ஆக தேர்வு செய்வார்கள்.
இந்த நிலையில், அடுத்த பாப்பரசர் ஆண்டவருக்கான போட்டியில், ஹங்கேரியை சேர்ந்த கர்தினால் பீட்டர் எர்டோ (72), பிலிப்பைன்ஸை சேர்ந்த கர்தினால் லூயிஸ் அன்டோனியோ டாக்லே (67), ஆபிரிக்காவின் கானாவை சேர்ந்த கார்டினல் பீட்டர் டர்க்சன்(76), இத்தாலியைச் சேர்ந்த கர்தினால் பியட்ரோ பரோலின்(70) ஆகியோர் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
பியட்ரோ பரோலின்
இவர்களில் கர்தினால் பியட்ரோ பரோலின்(Pietro-parolin) அடுத்த பாப்பரசர் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பியட்ரோ பரோலினுக்கு 41 சதவீத ஆதரவு இருப்பதாகவும், அடுத்ததாக லூயிஸ் அன்டோனியோ டோக்லேக்கு 29 சதவீத ஆதரவும் இருப்பதாக கணிப்புகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
You May Like This..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
