கணேமுல்ல சஞ்சீவ படுகொலை! சந்தேகநபருக்கு பிணை..
புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து கொலை செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவர் கணேமுல்ல சஞ்சவீவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றையதினம் குறித்த பிணை உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை
பூஸா சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரே இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் குற்றவாளி கூண்டிற்குள் வைத்து பாதாள உலகக் குழுவின் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
மேலும், துப்பாகிதாரி அன்றையதினமே மாலை கைது செய்யப்பட்டிருந்மையும் குறிப்பிடத்தக்கது.
