நீதிமன்றில் முன்னிலையான பிள்ளையான்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்(Sivanesathurai Chandrakanthan) நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இன்று(10) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் இவர் முன்னிலையாகியுள்ளார்.
காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜிற்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து பிள்ளையானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகளுக்காகவே அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சராகவும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும், பதவி வகித்த வேளையில் காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் உடன் காணி தொடர்பாக தொலைபேசி மூலமாக ஏற்படுத்திக் கொண்ட உரையாடலின் போது அவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri