உரிய ஆவணங்களுடன் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!
கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அதிகாரியால் நீதிமன்ற வழக்குகளுடன் தொடர்புடைய பின்வரும் சான்றுப்பொருட்களுக்கு உரிமைகோருபவர்கள் இருப்பின் உரிய ஆவணங்களுடன் பதிவாளரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற வழக்குகளுடன் தொடர்புடைய பின்வரும் மோட்டார் சைக்கிள் சான்றுப் பொருட்கள் கிளிநொச்சி பொலிஸ் அதிகாரியால் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற பதிவாளரை தொடர்புகொள்ளல்
குறித்த சான்றுப்பொருட்களாவன, (NP-BGB 3313, NPJL -6534, NPWD-6567, NPCC-49, NPHR 2462, NPCD-5564, WPMQ-0620, NPGI-5854, MD2DSPAZZTWM85062)
இந்த மோட்டார் சைக்கிள் சான்றுப்பொருட்கள் தொடர்பில் உரிமை கோருபவர்கள் இருப்பின் எதிர்வரும் 19.06.2023 திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்களுடன் நீதிமன்ற பதிவாளரை தொடர்புகொள்ளுமாறு பதிவாளர் அறிவுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |