பிரபல வர்த்தகரின் விபரீத முடிவு - கையடக்க தொலைபேசியில் சிக்கிய ஆதாரம்
நுவரெலியா, ஹோர்டன் சமவெளி வீதியில் பட்டிப்பொல பிரதேசத்தில் உள்ள காடு ஒன்றில் நபர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
உயிரிழந்தவர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 42 வயதான உதித சந்தருவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது முதல் மனைவி மற்றும் பிள்ளை இருவரும் 2019ஆம் ஆண்டு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். பின்னர் அவர் மற்றுமொரு திருமணம் செய்துக் கொண்டுள்ளார். அந்த திருமணத்தில் அவருக்கு குழந்தை ஒன்று உள்ளது.
உயிரிழந்தவர் பிரபலமாக வர்த்தகர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர் உயிரை மாய்த்துக் கொண்ட இடத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து கையடக்க தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது.
அதில் கடிதம் ஒன்று புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கமைய பணப்பிரச்சினை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதலைப் புலிகளின் தலைவரால் ரணிலுக்கு ஏற்பட்ட தோல்வி! - காலம் கடந்து வெளியான தகவல் (பத்திரிக்கை கண்ணோட்டம்) |

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 10 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
